search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்மலா சீதாராமன்"

    • மத்திய புலனாய்வு அமைப்புகள் சுமார் 30 நிறுவனங்களில் சோதனை நடத்தியுள்ளன.
    • சோதனைக்கு பின் பல நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்ட பிறகு, பல தனியார் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியிருப்பதாக பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இது மத்திய புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம், தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இந்த 3 புலனாய்வு அமைப்புகளில் 2 அமைப்புகள் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.

    பா.ஜ.க. அரசாங்கத்தால் புலனாய்வு அமைப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முழு தேசத்திற்கும் தெரியும். 2014-ம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்குகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன. இதில் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.

    பா.ஜ.க.வுக்கு மொத்தம் ரூ.187.58 கோடி வழங்கிய 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள், 2014 முதல் சோதனை நடந்த ஆண்டு வரை பா.ஜ.க.வுக்கு எந்த நன்கொடையும் வழங்கியிருக்கவில்லை. ஆனால் அதன்பிறகு நன்கொடை வழங்கியுள்ளன. ஏற்கனவே நன்கொடை வழங்கி வந்த நிறுவனங்கள், சோதனைக்குப் பிறகு அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன.

    விசாரணை அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் சட்டவிரோதமானது என நாங்கள் கூறவில்லை. விசாரணையை எதிர்கொண்ட பின் இந்த நிறுவனங்கள் ஏன் பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்குகின்றன என்பது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும். அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் பா.ஜ.க.வுக்கு நன்கொடை அளிப்பது வெறும் தற்செயலானதா?

    இந்த விவகாரத்தை நாங்கள் நீதித்துறையிடமும், மக்களிடமும் கொண்டு செல்வோம். இரு இடங்களிலும் நாங்கள் உங்களைத் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.க. தனது நிதி ஆதாரங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்படி இல்லையெனில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் இந்த நன்கொடைகள் குறித்த விசாரணைக்கு உடன்பட வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சி, மோடி ஆட்சி கால பொருளாதரம் குறித்து வெள்ளை அறிக்கை.
    • உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை- என நிர்மலா சீதாராமன் விமர்சனம்.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

    அதன்படி நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இன்று அவர் மக்களவைவில் வெள்கை அறிக்கை தொடர்பாக பேசினார். அப்போது நீங்கள் (UPA- காங்கிரஸ் ஆட்சி காலத்தில்) நிலக்கரியை சாம்பலாக்கி விட்டீர்கள். நாங்கள் நிலக்கரியை வைரமாக்கியுள்ளோம். நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள். 2008 பொருளாதார நெருக்கடி கொரோனா நெருக்கடி காலம் போன்றது போல் தீவிரமாக இல்லை. காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஊழல் மேல் ஊழல் தொடர்ந்தது. இப்படி பட்ட சூழ்நிலையில்தான் ஆட்சியில் இருந்து வெளியேறினார்கள்" என்றார்.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
    • நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

    டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது.

    வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன.

    காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தன.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்தது.

    இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    • மோடியின் கடந்த 9 ஆண்டு காலத்தில் கர்நாடகா 2 லட்சத்து 8 ஆயிரத்து 832 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
    • கர்நாடகா ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் 6280 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வரி வசூல் பெறும் நிலையில், மத்திய அரசு திருப்பி அளிக்கும் நிதி மிகவும் குறைவு. வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என கார்நாடக மாநில முதல்வர் சித்தராமையா விமர்சனம் செய்தார்.

    மேலும், டெல்லியில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது "வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இந்த வருடம் கர்நாடகா 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், அதன்பின் மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது. இதுதான் எங்களுடைய பங்கீட்டு தொகை"என்றார்.

    இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநில அரசின் குற்றச்சாட்டு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறியதாவது:-

    13-வது நிதிக் கமிசன் காலத்தில் (2010-11 முதல் 2014-15) கர்நாடகா 61,691 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    14-வது நிதிக்கமிசன் காலத்தில் (2015-16 முதல் 2019-20 வரை) ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    தற்போதைய 15-வது நிதிக் கமிசன் காலத்தில் 2020-21 முதல் 2026 மார்ச் 31-ந்தேதி வரை நான்கு ஆண்டு காலத்தில் தற்போதுவரை கர்நாடகா ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 854 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    இது முழுக்காலம் அளவில் தோராயமாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 339 கோடி ரூபாயாக இருக்கும். இது வரிப்பகிர்வு தொடர்பானது.

    மானிய உதவியை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு மத்திய ஆட்சி காலத்தில் கர்நாடகா 60 ஆயிரத்து 779 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    மோடியின் கடந்த 9 ஆண்டு காலத்தில் கர்நாடகா 2 லட்சத்து 8 ஆயிரத்து 832 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கூடுதலாக பட்ஜெட்டின்படி இந்த ஆண்டு 18 ஆயிரத்து 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதனால் கர்நாடகா 2 லட்சத்து 26 ஆயிரத்து 837 கோடி ரூபாய் பெறும்.

    கர்நாடகா ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் 6280 கோடி ரூபாய் பெற்றுள்ளது.

    கர்நாடகாவின் நிதி எங்கே மறுக்கப்படுகிறது. கர்நாடகா எங்கே நிதியை குறைவாக பெற்றுள்ளது.

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
    • தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் பிப்.8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1 கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது
    • சில வீடுகளின் மேற்கூரையில் மட்டுமே இது சாத்தியம் எனும் கருத்து நிலவுகிறது

    2024 ஜனவரி 22 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, பிரதான் மந்த்ரி சூர்யோதய் யோஜ்னா (Pradhan Manthri Suryoday Yojana) எனும் திட்டத்தை குறித்து விளக்கினார்.

    இதன்படி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கான தகடுகளை பொருத்தி மின்சார தன்னிறைவு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம், குடும்பங்களின் மாதாந்திர மின்சார தேவையை ஈடு செய்யவும், உபரியாக உற்பத்தி ஆகும் மின்சாரத்தை அரசுக்கு விற்று குடும்பத்தினர் வருவாய் ஈட்டவும் வழிவகை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது குறித்து பேசினார்.

    சுமார் 1 கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஓளி மின்சாரத்திற்கான தகடுகள் பொருத்தப்படும் என்றும் இதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் அவர்களுக்கு 300 யூனிட் இலவசம் என்றும் தனது உரையில் தெரிவித்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று பசுமை எரிசக்தி துறை பங்குகளின் விலை, பங்குச்சந்தையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கெனவே சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான கட்டமைப்பை அமைக்க அரசு மானியம் வழங்குவது நடைமுறையில் உள்ளது.

    ஆனாலும், அரசின் இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பல பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    1 கிலோவாட் பவர் உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் தரப்படுகிறது. ஆனால், 1 கிலோவாட் உற்பத்திக்கு சுமார் 10 சதுர மீட்டர் இடம் தேவை. சில வீடுகளின் மேற்கூரையில் மட்டுமே இது சாத்தியமாகும்.

    இதையும் தாண்டி தங்கள் வீட்டு உபயோகத்திற்கு மின்சார உற்பத்தி செய்ய விரும்பும் பயனர்கள், மின்சார வாரியத்திற்கு ஏன் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என புலம்புகின்றனர்.

    அரசாங்கம் வழங்கும் குடிநீரை பயன்படுத்த கட்டணம் வசூலிப்பது சரி. வீட்டு கிணற்றிலிருந்து நீரை பயன்படுத்துவதற்கு கட்டனம் வசூலிப்பது சரி அல்ல என உதாரணம் கூறும் பயனர்கள், குடும்பத்தினரின் சொந்த உபயோகத்திற்கு சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்வதற்கு அரசு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், இது ஏற்க முடியாதது என்றும் கூறுகின்றனர்.

    மேலும், மானிய தொகையை அரசிடம் பெறுவதிலும் சிக்கல் நிலவுவதாக சமூக வலைதளங்களில் சில பயனர்கள் தெரிவித்தனர்.

    • பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
    • வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் பாதையை வகுக்கும் வகையில் எங்கள் ஆட்சி உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் இது. ஐந்து முக்கிய அம்சங்களை கொள்கையாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது."

    "பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 கோடி மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2-இல் இருந்து 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளது."

    "ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், மேற்கூரை சோலார் மின் தகடுகள் திட்டம், நடுத்தர வயதினருக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற கிழக்கு மாநிலங்களும் பங்களிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

    "ரயில்வேக்கு மூன்று பிரதான பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 40 ஆயிரம் ரயில்வே பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த பத்து ஆண்டுகால பொருளாதார செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் 12 விதமான முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார். 

    • 2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது. மாலத்தீவு விவகாரத்தை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

    வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது. கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்ப தரும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    • லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை கொண்டு வரப்படும். இந்தியாவில் அன்னிய முதலீடுகள் 596 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. லட்சத்தீவில் சுற்றுலா உள் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜெய்சவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் உடன் ஜெய் அனுசந்தான் (ஆராய்ச்சி) என்பதே மோடி அரசின் குறிக்கோள். 40 ஆயிரம் சாதாரண ரெயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும். ஆன்மீக சுற்றுலாவிற்கான திட்டங்கள் கொண்டு வருவதால் உள்ளூர் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். 2023-24-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடியாகும். ஜூலையில் நாட்டின் வளர்ச்சிக்காக விரிவான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

    2024-25-ல் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.
    • பாதுகாப்பு துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜி.டி.பி.யில் 3.4 சதவீதம் ஆக இருக்கும்.

    மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாடு முழுவதும் புதிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் திட்டம் தொடங்கும். சரக்கு ரெயில் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக வழித்தடங்கள் செயல்படுத்தப்படும்.

    10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

    நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் புதிதாக 1000 விமானங்கள் வாங்க உள்ளன. பாதுகாப்பு துறையில் முதலீடு 11.1 சதவீதம் ஆக உயர்த்தி 11, 11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

    பாதுகாப்பு துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜி.டி.பி.யில் 3.4 சதவீதம் ஆக இருக்கும். விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×